திருத்துறைப்பூண்டியில் லாரி வேலை நிறுத்தத்தால் நெல் மூட்டைகள் தேக்கம்

திருத்துறைப்பூண்டியில் லாரி வேலை நிறுத்தத்தால் நெல் மூட்டைகள் தேக்கம்
X

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  லாரிகள். 

திருத்துறைப்பூண்டியில் வாடகையை உயர்த்தி தரக்கோரி 600க்கும் மேற்பட்ட லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 600 லாரிகள் உள்ளன. இவை அனைத்தும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நெல்மூட்டைகளை ஏற்றி வருகின்றன. அதற்கு வாடகையாக 8% மட்டும் வழங்கப்படுகின்றது. அருகில் உள்ள திருவாரூர், மன்னார்குடி, நாகப்பட்டினம் பகுதிகளில் உள்ள லாரிகளுக்கு 11% வழங்கப்படுகின்றது.

ஆனால் திருத்துறைப்பூண்டி பகுதியுள்ள லாரிகளுக்கு ஒப்பந்தாரர் வாடகையை உயர்த்தி தரவில்லை. அதனால் லாரிகளின் உரிமையாளர்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்ததில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் திருத்துறைப்பூண்டியை சுற்றியுள்ள 69 நேரடி நெல் கொள்முதல்நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் தேங்கியுள்ளன .மழை பெய்து வருவதால் நெல்மூட்டைகள் பாழாகிவிடும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இதனை நம்பியுள்ள 1000 ஓட்டுனர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவே உடனடியாக வாடகையை உயர்த்தி தர வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்திகின்றனர்.

Tags

Next Story