திருத்துறைப்பூண்டி: மிஸ்டர் தமிழ்நாடாக திருவள்ளூர் ஸ்ரீராமுலு தேர்வு

திருத்துறைப்பூண்டி: மிஸ்டர் தமிழ்நாடாக  திருவள்ளூர் ஸ்ரீராமுலு தேர்வு
X

மிஸ்டர் தமிழ்நாடு 2021 ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்ற ஸ்ரீராமுலு. 

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீராமுலு, மிஸ்டர் தமிழ்நாடு 2021 - ஆக தேர்வு செய்யப்பட்டார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில், பிரண்ட்லி பிட்னஸ் ஜிம் மற்றும் இந்தியன் பிட்னஸ் பெடரேஷன் இணைந்து மாநில அளவிலான மிஸ்டர் தமிழ்நாடு 2021 ஆணழகன் போட்டியை நடத்தின. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 150 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் ஆணழகன் போட்டியில், முதல் பரிசு ரூபாய் ஐம்பதாயிரத்தை, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீராமுலு பெற்றார். இரண்டாம் பரிசு 15 ஆயிரம் ரூபாய் பரிசை, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த அருள் என்பவரும், மூன்றாம் பரிசு பத்தாயிரம் ரூபாயை திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் ஆகியோர் வென்றனர். நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai marketing future