திருத்துறைப்பூண்டி அருகே மழைநீர் சூழ்ந்ததால் நெல் மூட்டைகள் சேதம்

திருத்துறைப்பூண்டி அருகே மழைநீர் சூழ்ந்ததால் நெல் மூட்டைகள் சேதம்
X

 திருத்துறைப்பூண்டி அருகே குறும்பல் பகுதியில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலைத்தில் மழையில் நனைந்த நெல் மூட்டைகள்

திருத்துறைப்பூண்டி அருகே செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தொடர் மழை காரணமாக மழையினால் சூழ்ந்து சேதமடைந்தது

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே குறும்பல் பகுதியில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இப்பகுதி விவசாயிகள் இந்த கொள்முதல் நிலையத்தில் தங்களது நெற்பயிர்களை விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முதல் தொடர்ந்து இரண்டாவது நாளாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது . குறிப்பாக இப்பகுதியில் இயங்கிவரும் நெல் கொள்முதல் நிலையம் சற்று தாழ்வான பகுதியாக இருப்பதால் இந்த கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக விவசாயிகள் வைத்துள்ள 3000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையினால் சூழ்ந்து சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

நேரடி நெல் கொள்முதலில் ஆன்லைன் முறையை பின்பற்றுவதாலேயே காலதாமதம் ஏற்பட்டு இதுபோன்று நெல் மூட்டைகள் சேதம் அடைவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் தற்போது மழை பெய்து வருவதால் நெல்லின் ஈரப்பதம் அதிகமாகி உள்ளது. எனவே கொள்முதல் செய்வதற்கான ஈரப்பத அளவை அதிகரித்து விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil