/* */

திருவாரூர்: 700 நாட்டின மாடுகளுடன் மெகா மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்

திருத்துறைப்பூண்டி அருகே பாரம்பரிய உம்பளச்சேரி இன அரசு கால்நடை பண்ணையில், 700க்கும் மேற்பட்ட கால்நடைகளுடன் மாட்டுப்பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவாரூர்: 700 நாட்டின மாடுகளுடன் மெகா மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்
X

உம்பளச்சேரி இன அரசு கால்நடை பண்ணையில் 700க்கும் மேற்பட்ட கால்நடைகளுடன் மாட்டுப்பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே, கொருக்கையில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பாரம்பரிய உம்பளச்சேரி இன அரசு கால்நடை பண்ணை இயங்கி வருகிறது. இதில் 700-க்கும் மேற்பட்ட பாரம்பரிய உம்ளச்சேரி இன பசுமாடுகள், காளை மாடுகள், கன்றுகள் வளர்த்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் கால்நடைப் பண்ணையில் மாட்டுப் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று மாட்டுப்பொங்கல் விழாவை முன்னிட்டு, பாரம்பரியமிக்க உம்ளச்சேரி இன பசுமாடுகள் , கன்றுகள், காளைகளுக்கு பாரம்பரியமுறைப்படி மாடுகளுக்கு மாலை அணிவித்து பொங்கல் வைத்து கற்பூர ஆராதனை செய்து பசும்புல் தீவனம் வழங்கி கொண்டாடப்பட்டது.

இதில், கால்நடை துறை இணை இயக்குனர் மருத்துவர் ராமலிங்கம், பண்ணை மருத்துவர் நெப்போலியன், கொருக்கை ஊராட்சிமன்ற தலைவர் ஜானகிராமன் மற்றும் பண்ணை பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Jan 2022 12:59 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?