புற்றடி மாரியம்மன் திருக்கோவில் பாடைகாவடி திருவிழா

புற்றடி மாரியம்மன் திருக்கோவில் பாடைகாவடி திருவிழா
X

புற்றடி மாரியம்மன் திருக்கோவிலில் பங்குனி பெருவிழாவில்  இன்று பாடைகட்டி திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி அருகே புற்றடி மாரியம்மன் திருக்கோவில் பாடைகாவடி திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தகரவேலி கிராமத்தில் உள்ள அருள்மிகு புற்றடி மாரியம்மன் திருக்கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த 14ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்று பாடைகட்டி திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இதில் உடல் நலம் வேண்டி தொட்டில் காவடி ,பாடை காவடி எடுத்தல் மற்றும் மாவிலக்கு சாற்றுதல் மற்றும் சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது .மேலும் சேவல் காணிக்கையும் விடப்பட்டது. இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!