டிராக்டரை ஓட்டி பயில முயன்ற 15 வயது சிறுவன் உடல் நசுங்கி பலி

டிராக்டரை ஓட்டி பயில முயன்ற 15 வயது சிறுவன்  உடல் நசுங்கி பலி
X

பலியான சிறுவன் சசிகுமார்.

திருத்துறைப்பூண்டி அருகே டிராக்டரை ஓட்டி பயில முயன்ற 15 வயது சிறுவன் டிராக்டருடன் கவிழ்ந்து உடல் நசுங்கி பலியானான்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆண்டங்கரை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சதீஷ். இவரது மகன் சசிகுமார் 15 வயதான இவன் பாமணி கிராமத்தில் உள்ள தனது மாமா வீட்டிற்கு பள்ளி விடுமுறைக்காக சென்றிருந்தான். அப்போது வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரை ஓட்டி பழக முயற்சித்துள்ளான். இதில் டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த தெற்கு பாமணி வடிகால் வாய்க்காலில் கவிழ்ந்து உள்ளது. இதில் சிறுவன் சசிகுமார் மீது டிராக்டர் கவிழ்ந்து உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

உடனடியாக இச்சம்பவம் குறித்து திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்து. அதன் பேரில் சிறுவனின் உடலை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இந்தசம்பவம் குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!