திருத்துறைப்பூண்டியில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடக்கம்
திருத்துறைப்பூண்டியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் தொடங்கி வைத்தார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நெடும்பலம் பகுதியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியர் .ப.காயத்ரி கிருஷ்ணன். தலைமை வகித்தார் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். .
அப்போது விஜயன் கூறுகையில் "மக்களைத் தேடி மருத்துவம்" திட்டம் பொதுமக்கள் குடியிருக்கும் வீட்டினை தேடி அவர்களுக்கு சேவை செய்யும் ஒரு புனிதமான திட்டமாகும்.வீட்டைத் தேடி மருத்துவம் என்பது வயது முதிர்ந்த நபர்களின் உடல் நலம், மனநலம், சமுதாய நலம் மற்றும் உணர்வுபூர்வமாக அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த தேவையான ஆலோசனைகளை வழங்கும் திட்டம் ஆகும், வயது முதிர்ந்த நபர்களுக்கும், மற்ற பயனாளிகளுக்கும் அவர்கள் வசிக்கும் வீடுகளுக்கே சென்று பயிற்சி அளிப்பது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும். உடல் குறைபாடு உடையவர்களை இனம் கண்டு சம்பந்தப்பட்ட வட்டாரங்களில் செயல்படும் பள்ளிசிறார் சிகிச்சை குழுக்கள் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கும் பணியினையும் பெண் சுகாதார தன்னார்வலர்கள் செய்கிறார்கள். இ-சஞ்சீவினி செயலிமூலம் தொற்றாநோய் நோயாளிகளை இனம் காணுதல், அவர்களின் தேவைகளை அறிந்து சிகிச்சை செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டமானது வலங்கைமான் வட்டாரத்தில் 05.08.2021 அன்று முதற்கட்டமாக துவங்கப்பட்டு இன்றைய தேதிவரை சுமார் 5666 தொற்றாநோய் பயனாளிகள் தங்கள் இல்லங்களிலேயே சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தினை திருவாரூர் மாவட்டத்தில் மீதமுள்ள 9 வட்டாரங்களில் விரிவுபடுத்துகின்ற வகையில் இன்றைய தினம் திருத்துறைப்பூண்டி நெடும்பலம் பகுதியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்நிகழ்வில் சுகாதாரத்துறையின் துணை இயக்குநர் .ஹேமசந்த் காந்தி, வருவாய் கோட்டாட்சியர்.அழகர்சாமி, திருத்துறைப்பூண்டி ஒன்றிய குழுத்தலைவர் .பாஸ்கர், திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலெக்ஸாண்டர், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர்.பாண்டியன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu