திருத்துறைப்பூண்டியில் சர்வதேச வன உயிரின தின விழா கொண்டாட்டம்

திருத்துறைப்பூண்டியில் சர்வதேச வன உயிரின தின விழா கொண்டாட்டம்
X
வன உயரின தின விழா கொண்டாடப்பட்டது.
திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டையில் வனத்துறை சார்பில் சர்வதேச வன உயிரின தின விழா கொண்டாடப்பட்டது .

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3 ஆம் தேதி சர்வதேச வன உயிரின தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து இன்றைய தினம் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் வனத்துறை சார்பில். வன உயிரின நாளை முன்னிட்டு வன விலங்குகளை எவ்வாறு நாம் பாதுகாப்பது என்றும் காடுகள் மற்றும் மரம் வளர்ப்பது குறித்தும் வனவிலங்குகள் தாவரங்கள் பற்றியும் வனச்சரக அலுவலர் தாஹிர் அலி பள்ளி மாணவர்களுக்கு விளக்கி கூறினார்.

மேலும் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.இந்த நிகழ்வில் வனவர் பெரியசாமி , மற்றும் வனதுறை பணியாளர்கள் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!