திருத்துறைப்பூண்டி சுவர்களில் ஒட்டியுள்ள போஸ்டர்களை அகற்றும் பணி தீவிரம்

திருத்துறைப்பூண்டி  சுவர்களில் ஒட்டியுள்ள போஸ்டர்களை அகற்றும் பணி தீவிரம்
X

திருத்துறைப்பூண்டியில் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன.

திருத்துறைப்பூண்டி சுவர்களில் உள்ள கட்சி போஸ்டர் மற்றும் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதால் தேர்தல் விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்தன. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் நகராட்சி அலுவலகத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டும்,பேரிகார்டு அமைத்தும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நகர்ப்பகுதிகளில் உள்ள சுவர்களில் எழுதியுள்ள கட்சி விளம்பரங்கள் மற்றும் நகர்ப்பகுதிகளில் சுவர்களில் ஒட்டியுள்ள போஸ்டர்களை அகற்றும் பணியிலும் நகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!