திருத்துறைப்பூண்டி பகுதியில் கனமழையால் 8 வீடுகள் இடிந்து சேதம்

திருத்துறைப்பூண்டி பகுதியில்  கனமழையால் 8 வீடுகள் இடிந்து சேதம்
X

திருத்துறைப்பூண்டி பகுதியி்ல் மழையால் இடிந்த வீட்டை  அதன் உரிமையாளர்கள் பார்த்தனர்.

திருத்துறைப்பூண்டி பகுதியில் பலத்த மழையினால் 8 வீடுகள் இடிந்து விழுந்தன.

குமரி கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த ஒரு வார காலமாக திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருத்துறைப்பூண்டி பகுதிகளில் நாள் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் 9 சென்டி மீட்டர் மழையும், நேற்றைய தினம் 3.5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக திருத்துறைபூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் நீர் சூழ்ந்துள்ளது. மக்கள் குடியிருப்புகளிலும் நீர் புகுந்துள்ளது.

இதனிடையே இன்றைய தினம் திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் மட்டும் 8 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளது .குறிப்பாக விளக்குடி, கொறுக்கை ,வேளூர், செட்டியமூலை, ராயநல்லூர் ,கொத்தமங்கலம் , நுனாகாடு ஆகிய பகுதிகளில் 7 கூரை வீடு மற்றும் ஒரு ஓட்டு வீடு சேர்த்து 8 வீடுகளின் சுவர்கள் இடிந்து சேதம் அடைந்துள்ளது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை .தொடர்ந்து மழை பெய்த வண்ணம் இருப்பதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!