திருத்துறைப்பூண்டியில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து

திருத்துறைப்பூண்டியில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து
X

திருத்துறைப்பூண்டி அருகே ஆட்டூர் கிராமத்தில் பலத்த மழையால் வீடு இடிந்து விழுந்தது.

திருத்துறைப்பூண்டி அருகே கனமழை காரணமாக ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து அருகில் இருந்த கூரை வீட்டின் மேல் விழுந்தது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆட்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் செல்லத்துரை (42) விவசாய கூலி தொழிலாளி .இவரது ஓட்டு வீடு கஜா புயலில் சேதமடைந்து. இதனை சீரமைக்க போதிய வருமானம் இல்லாததால் ஓட்டு வீட்டின் அருகில் கூரை வீடு ஒன்றை கட்டி வசித்து வந்துள்ளனர்.

நேற்று இரவு பெய்த மழையால் காலையில் ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து கூரை வீட்டின் மேல் விழுந்துள்ளது. செல்லத்துரை வழக்கம் போல் காலையில் வெளியில் வேலைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் வீட்டில் அவரது மனைவி முத்துலட்சுமி மற்றும் மாமியார் வசந்தா இருவரும் வீட்டில் இருந்து வந்த நிலையில் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் .கூரை வீட்டில் இருந்த பீரோ, கட்டில், பாத்திரங்கள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!