மனநலம் பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
குடும்பத்தினருடன் ஒப்படைக்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண்.
திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் இரு தினங்களுக்கு முன்பு 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றி திரிவதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் மணிமேகலை மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை திருத்துறைப்பூண்டி நம்பிக்கை மனநல காப்பகத்தில் சேர்த்து, தொடர்ந்து அவர் மேற்கொண்ட விசாரணையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் கௌதமி என்றும் அவரது குடும்பத்தினர் கோவையை சேர்ந்தவர்கள் என்றும் வேளாங்கண்ணிக்கு வந்த பொழுது வேண்டுமென்றே இவரை திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் விட்டு விட்டு சென்றதும் தெரியவந்தது.
இன்றைய தினம் அவரது குடும்பத்தாரை வரவழைத்து அவர்களுக்கு அறிவுரை கூறி மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை அவர்கள் குடும்பத்துடன் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் சோமசுந்தரம் அவரது குடும்பத்தாரிடம் அறிவுரை கூறி கௌதமியை அனுப்பிவைத்தார். இந்நிகழ்வில் திருத்துறைப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் சோமசுந்தரம் ,காவல் ஆய்வாளர் கழனியப்பன், மனநல காப்பக இயக்குனர் சௌந்தரராஜன், ஆய்வாளர் மணிமேகலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu