அரசு பேருந்தை காணவில்லை என கிராம மக்கள் போஸ்டர் ஒட்டி நூதன போராட்டம்

அரசு பேருந்தை காணவில்லை என கிராம மக்கள் போஸ்டர் ஒட்டி நூதன போராட்டம்
X

கிராம மக்களால் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்

திருத்துறைப்பூண்டி அருகே அரசு பேருந்தை காணவில்லை என கிராம மக்கள் போஸ்டர் ஒட்டி நூதன போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உதயமார்த்தாண்டபுரம், நாச்சிகுளம் பகுதியில் இருந்து புத்தகரம், சித்தமல்லி, பெருகவாழ்ந்தான், மதுக்கூர், உள்ளிட்ட பகுதி வழியாக பட்டுக்கோட்டை செல்லக்கூடிய அரசு பேருந்து கொரோனா காலத்துக்கு முன்பு வரை இயங்கியது .

இந்நிலையில் தளர்வுகள் முடிந்தும் பேருந்து இயங்கவில்லை .இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது .மேலும் பட்டுக்கோட்டை கிளை மேலாளரிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அரசு பேருந்தை காணவில்லை என்று உதயமார்த்தாண்டபுரம் நாச்சிகுளம் பகுதியில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் பெருகவாழ்ந்தான் ,மதுக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் படிக்கக்கூடிய மாணவர்கள் பேருந்து வசதி இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக பேருந்தை இயக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!