சிறுமியை கடத்தி திருமணம் : அடைக்கலம் கொடுத்த அண்ணன் கைது

சிறுமியை கடத்தி திருமணம் : அடைக்கலம் கொடுத்த அண்ணன் கைது
X

சிறுமியை கடத்தி திருமணம் செய்ய உதவிய அண்ணன்.

சிறுமியை கடத்தி திருமணம் செய்த தம்பிக்கு அடைக்கலம் அளித்த அண்ணனும் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடி பகுதியை சேர்ந்த விக்னேஷ் கண்ணன் (22) இவர் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த 2021ஜனவரி மாதம் 16ஆம் தேதி கடத்திச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர்கள் திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் காரைக்கால் பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று விக்னேஷ் கண்ணனையும் சிறுமியையும் போலீசார் மீட்டனர். இதைத்தொடர்ந்து கார் ஓட்டுநர் விக்னேஷ்(எ) கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் பெயிலில் வெளியே வந்த விக்னேஷ்கண்ணன் மீண்டும் அதே 14 வயது சிறுமியை கடத்தி சென்று சிறுமிக்கு தாலிக்கட்டி சென்னையில் வேலை பார்த்து வரும் அவரது அண்ணன் வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர்.

இந்நிலையில் தம்பி கடத்தி வந்த பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்த சகோதரர் வினோத் கண்ணனை திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் போக்ஸோ ஆக்ட் பிரிவின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!