முன்னாள் ராணுவத்தினரை கொண்டு கேட் கீப்பர் காலியிடங்களை நிரப்ப திட்டம்
புதிதாக அகல ரயில் பாதை அமைக்கும் பணிகளை ரயில்வே திருச்சி மண்டல முதன்மை கணக்கு அதிகாரி வர்மா ஆய்வு மேற்கொண்டார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து, அகஸ்தியம்பள்ளி வரையிலான மீட்டர்கேஜ் ரயில் பாதை அகற்றப்பட்டு, புதிதாக அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை, ரயில்வே திருச்சி மண்டல முதன்மை கணக்கு அதிகாரி வர்மா ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: பருவமழை துவங்கி இருப்பதன் காரணமாக, தற்பொழுது ரயில் பாதை அமைக்கும் பணிகளில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது .பருவ மழையின் அளவை பொருத்து திட்டமிடப்பட்ட இந்த ஆண்டிற்குள்ளேயே பணிகள் முடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பணிகள் முடிக்கப்பட்டு உடன் பாதுகாப்பு ஆய்வு குழு ஆய்வு மேற்கொண்ட பின்பு, இத்தடத்தில் ரயில் பயணமானது துவங்கப்படும். காரைக்குடி வரையிலான ரயில் சேவை தென்னக ரயில்வே கோட்டத்தின் ஆய்வுக்குப் பின் முடிவு செய்யப்படும் . கேட் கீப்பர்கள் பிரச்சனையை சரி செய்வதற்காக முன்னாள் ராணுவத்தினரை பணியமர்த்தி தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu