திருத்துறைப்பூண்டியில் இலவச கண் சிகிச்சை முகாம்: 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

திருத்துறைப்பூண்டியில் இலவச கண் சிகிச்சை முகாம்: 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
X

விளக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்.

திருத்துறைப்பூண்டி அருகே  நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தன்னார்வ அமைப்பு மற்றும் திருவாரூர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இம்முகாமை திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து தொடங்கி வைத்தார்.

இந்த கண் சிகிச்சை முகாமில் கண்புரை, கிட்டப்பார்வை, தூரப்பார்வை மற்றும் கண் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இம்முகாமில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்