முத்துப்பேட்டையில் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

முத்துப்பேட்டையில் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
X

முத்துப்பேட்டையில் மீன் தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முத்துப்பேட்டையில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மீன்பிடி தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த முத்துப்பேட்டையில் தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

அண்மையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 22 நாகை மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும், மீனவர்கள் நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும், 55 வயதை கடந்த பெண்களுக்கு மாதம் ரூபாய் 3 ஆயிரத்தை உதவி தொகையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் ஜீவானந்தம் ,மாவட்ட தலைவர் செல்லதுரை உள்ளிட்ட அமைப்பை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!