திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய குழுவின் முதல் கூட்டம்

திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய குழுவின் முதல் கூட்டம்
X

திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.

மூடப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்ககோரி திருத்துறைப்பூண்டி ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருத்துறைப்பூண்டி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்களின் முதல் கூட்டம் தலைவர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தற்பொழுது கொள்முதல் குறைவாக உள்ள நெல் கொள்முதல் நிலையங்களை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பெரும்பாலான விவசாயிகள் மழை காரணமாக காலம் கடந்து விவசாயம் செய்த காரணத்தால் அறுவடை பணிகள் முழுவதுமாக நிறைவடையாமல் உள்ளது. எனவே மார்ச் 31 வரை நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போதுமான நிதி இல்லாத காரணங்களால் உள்ளாட்சி பணிகள் நடைபெறாமல் உள்ளது எனவே பணிகளை மேற்கொள்வதற்கு உடனடியாக போதுமான நிதியை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பிரதான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .

கூட்டத்தில் ஒன்றியக்குழு துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், ஆணையர்கள் சுப்பிரமணியன், சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான அரசு அலுவலர்கள் மற்றும் ஒன்றிய குழு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது