திருத்துறைப்பூண்டி அருகே பெண் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

X
குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட அன்பு.
By - Sabarinathan.J,Reporter |28 Dec 2021 11:34 AM IST
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பெண் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
திருத்துறைப்பூண்டி பகுதி பாண்டியில் சாராய மற்றும் மதுபாட்டில்கள் விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த பெண் சாராய வியாபாரி அன்பு திருத்துறைப்பூண்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார் .
தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பரிந்துரையின் படி மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவின்பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் .மேலும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu