திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் போராட்டம்

திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் போராட்டம்
X

திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் பயிர்களுக்கு இழப்பீடு கேட்டு போராட்டம் நடத்தினர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்( சி.பி.ஐ) சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட தாளடி பயிர்கள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரம் வழங்கிட வேண்டும் ,மழையால் வேலைவாய்ப்பு இழந்துள்ள விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் நிவாரணம் வழங்கிட வேண்டும்,மழை வெள்ள பாதிப்பில் இறந்துபோனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்கிட வேண்டும்,எஞ்சிய பயிர்கள் மற்றும் கோடைகால பல் வகை சாகுபடிக்கு தட்டுப்பாடின்றி கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ரசாயன உரங்கள் விற்பனை செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன் தலைமை தாங்கினார். முன்னதாக ரயில் நிலையத்தில் இருந்து விவசாயிகள் பேரணியாக புறப்பட்டு சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story