ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
X

ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றும் பணி

திருத்துறைப்பூண்டி அருகே ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த 9 வீடுகள் அகற்றப்பட்டது

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடி பொன்னிரை கிராமத்தில் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த ஐந்து மாடி வீடுகள், நான்கு கூரை வீடுகள் அகற்றப்பட்டன.

ஏற்கனவே 2019இல் காலக்கோடு கொடுக்கப்பட்டு வீடுகளை அகற்றுமாறு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டிருந்த நிலையில் 2 வருடத்திற்கு பிறகு மீண்டும் நாற்பது நாட்களுக்குள் காலி செய்யுமாறு கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது

40 நாட்களுக்கு மேலாகியும் காலி செய்யாததால் இன்று ரயில்வே நிர்வாகம் வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர் .

அப்போது பரபரப்பான சூழல் ஏற்பட்டதால் ஏராளமான ரயில்வே போலீசார் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர்.

Tags

Next Story
ai in future agriculture