திருத்துறைப்பூண்டியில் இல்லம் தேடி கல்வித்திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருத்துறைப்பூண்டியில் இல்லம் தேடி கல்வித்திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

திருத்துறைப்பூண்டி அரசு பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

திருத்துறைப்பூண்டியில் இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து ஆடல் பாடலுடன் விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவுப்படி, திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தியாகராஜன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் உதவித் திட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வழிகாட்டுதல்படி திருத்துறைப்பூண்டி வட்டார வள மையத்திற்குட்பட்ட 20 குடியிருப்பு பகுதிகளில் இல்லம் தேடிக் கல்வி எனும் தமிழக அரசின் புதிய கல்வி திட்டத்தின் சார்பாக விழிப்புணர்வு பிரச்சாரம் ஆடல், பாடல், நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து திருத்துறைப்பூண்டி அருகே பாமணி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆடல் பாடலுடன் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கொரோனா தொற்று பரவல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது .இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture