முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து முத்துப்பேட்டையில் ஆர்ப்பாட்டம்

முஸ்லிம்கள் மீதான  தாக்குதலை கண்டித்து முத்துப்பேட்டையில் ஆர்ப்பாட்டம்
X

முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து முத்துப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக முத்துப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் அருகில், முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதலை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்மையில் ராம நவமி அன்று நடைபெற்ற ஊர்வலங்களில் கர்நாடகா, குஜராத், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், பீகார், கோவா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்டச் செயலாளர் மர்சூக் அஹமது தலைமை தாங்கினார்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக், கேம்பஸ் ஃப்ரண்ட் மாநில பொருளாளர் சர்வத் ரஃபீக், முத்துப்பேட்டை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பின் தலைவர் முஹம்மது அலி மற்றும் நிர்வாகிகள், பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!