100 நாள் வேலை திட்ட ஊதியத்தை உயர்த்தி வழங்காவிட்டால் போராட்டம்

100 நாள் வேலை திட்ட ஊதியத்தை உயர்த்தி வழங்காவிட்டால் போராட்டம்
X

திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட குழு கூட்டம்

மத்திய அரசு அறிவித்துள்ள ஊதியத்தை உடனடியாக வழங்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் அறிவிப்பு

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட குழு கூட்டம் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது பேசிய சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாஸ்கர் கூறுகையில்,

100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு அறிவித்திருக்கிற ரூபாய் 281 ரூபாய் ஊதியத்தை உடனடியாக 10 ஒன்றியங்களிலும் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுத்து ஊதியம் வழங்கவில்லை என்றால் வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் முழுவதும் தமிழ் மாநில தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், மாவட்ட துணை செயலாளர் மோகன்,மாவட்ட பொருளாளர் உலகநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!