முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்ஹா கந்தூரி விழாவிற்கான கொடியேற்றம்

மின்னொளியில் ஜொலிக்கும் ஜாம்புவானோடை தர்ஹா.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை-ஜாம்புவானோடை தர்ஹா மஹான் செய்குதாவுது ஒலியுல்லா ஆண்டவரின் 720 வது ஆண்டு விழா கொடி ஊர்வலமாக புறப்பட்டு பழைய, புதிய பேருந்து நிலையம், ஆசாத் நகர் வழியாக சென்று மீண்டும் தர்ஹாவை அடைந்து கந்தூரி விழா கொடி ஏற்றப்பட்டது .
முன்னதாக கொரோனா, ஒமிக்ரான் போன்ற நோய்கள் ஒழியவும் அனைவரும் நலமாக வாழவும் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் பொதுமக்கள் பாதிப்பிலிருந்து மீண்டு நலம் பெறவும் தர்காவில் சிறப்பு துவா ஓதப்பட்டது .இந்த நிகழ்ச்சியில் 1000த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
வரும் 14 ந்தேதி சந்தனகூடு புறப்பட்டு அதிகாலை 5 மணிக்கு புனித இரவு லாஷரிபுக்கு சந்தனம் பூசும் விழா நடைபெறுகிறது . இந்த விழாவிற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை அளிப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu