தொடர் மழையால் திருத்துறைப்பூண்டியில் 500 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்

தொடர் மழையால் திருத்துறைப்பூண்டியில் 500 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்
X

மழையால் சேதமடைந்த பயிர்கள்.

திருத்துறைப்பூண்டியில் தொடர் மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த 500 ஏக்கர் பரப்பிலான சம்பா பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தன.

திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று முதல், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அறுவடைக்கு தயாராக உள்ள சம்பா பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான எடையூர், அம்மனூர், பாண்டி, கல்லுக்குடி, சோத்திரியம் ஆகிய பகுதிகளில் 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் சாய்ந்து மழைநீரில் மூழ்கியுள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெற்கதிர்கள் முளைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முறையாக வடிகால்கள் தூர்வாரப்படாததன் காரணமாகவே இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags

Next Story
ai future project