திருத்துறைப்பூண்டி அருகே கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா

திருத்துறைப்பூண்டி அருகே  கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா
X

திருத்துறைப்பூண்டிஅருகே நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு சீர் வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டி அருகே நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு 15 வகை சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மேட்டுப்பாளையம் கிராமத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை , ஒருங்கினைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா தனியார் திருமண அரங்கில் நடைபெற்றது .

இதில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு, சேலைகள், மஞ்சள், குங்குமம், பூ, பழம், பேரீச்சம்பழம், கடலைமிட்டாய் உள்ளிட்ட 15 வகையான பொருட்கள் சீர் வரிசையாக வழங்கப்பட்டது .

இந்நிகழ்ச்சியில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கண்ணகி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!