திருவாரூர்: மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்: மத்திய அரசை கண்டித்து  கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X
திருவாரூரில் மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவாரூரில் மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

டெல்லியில் நடைபெற்ற 73வது குடியரசு தின அணி வகுப்பில் தமிழகத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களான வேலுநாச்சியார் , குயிலி , பெரிய மருது , சின்னமருது , வ.உ.சிதம்பரனார் பாரதியார் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் அலங்கார அணிவகுப்பு வாகனத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி மறுக்கபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாஜக மோடி அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

முன்னதாக வேலுநாச்சியார் , குயிலி , பெரிய மருது , சின்னமருது , வ.உ.சிதம்பரனார் பாரதியார் உள்ளிட்ட தலைவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்

இதே போன்று திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் வேலுநாச்சியார் , குயிலி , பெரிய மருது , சின்னமருது , வ.உ.சிதம்பரனார் பாரதியார் உள்ளிட்ட தலைவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் பின்னர் அனைவரும் பாசிச எதிர்ப்பு தெரிவித்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!