திருத்துறைப்பூண்டி அருகே கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியல்

திருத்துறைப்பூண்டி அருகே கல்லூரி மாணவர்கள் திடீர்  சாலை மறியல்
X

திருத்துறைப்பூண்டி அருகே அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் அடிப்படை வசதி கோரி சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

அடிப்படை வசதி கோரி திருத்துறைப்பூண்டி அருகே அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கொருக்கை அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி, பேருந்து வசதி செய்து தர வேண்டும். மேலும் கல்லூரியில் கேன்டீன் வசதி செய்து தர வலியுறுத்தி இன்று கொருக்கை கடை வீதியில் 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இதனால் திருத்துறைப்பூண்டி -நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!