திருத்துறைப்பூண்டி அருகே கூட்டுறவு வங்கி முன் நடந்த மோதலால் பரபரப்பு

திருத்துறைப்பூண்டி அருகே கூட்டுறவு வங்கி முன் நடந்த மோதலால் பரபரப்பு
X

திருவாரூர் அருகே கூட்டுறவு வங்கி முன் போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

திருத்துறைப்பூண்டி அருகே கூட்டுறவு வங்கி முன் ஆர்ப்பாட்ட காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கொக்கலாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 2020-2021 ஆம் ஆண்டிற்கான பயிர்க் கடன் வழங்கியதில் நடைபெற்ற ஊழல் முறைகேட்டை கண்டித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு ஊழல் தடுப்பு இயக்கம் தமிழ் தேச தன்னுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட சென்ற ஆர்பாட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் காவல்துறையினருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையே வாக்குவாதம் உண்டாகி தள்ளுமுள்ளு ஏற்பட்டது .பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
ai solutions for small business