திமுக அரசை நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: முதலமைச்சர் பழனிச்சாமி
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அதிமுக சட்டமன்ற வேட்பாளர் சுரேஷ்குமாரை ஆதரித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது திமுக ஆட்சிக்காலத்தில் கபினி அணை கட்டினார்கள். அதை தடுத்து நிறுத்தி இருந்தால் நமக்கு பிரச்சனை இருந்திருக்காது. விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்காத அரசாக திமுக அரசு இருந்துள்ளது. விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க கூடிய அரசாக அதிமுக அரசு இருக்கிறது. ஒரு நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் எந்த ஒரு மாநிலம் கல்வியில் சிறந்து விளங்குகிறதோ, அந்த மாநிலத்தில் தானாக வளர்ச்சி கிடைக்கும். கல்வி வளர்ச்சி அதிகமாக கொடுப்பதற்காக மாநிலத்தில் அதிக கல்லூரிகளை அம்மா அரசு திறந்தது. ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குறைந்த கல்விக் கட்டணத்தில் கல்வி கற்பதற்கு கல்லூரிகளை உருவாக்கி தந்திருக்கிறது. மாண்புமிகு அம்மா அவர்கள் கல்விக்கு தான் முதன்மை கொடுத்து அதிக நிதி ஒதுக்கீடு செய்த துறை கல்வித் துறை இன்றைக்கு நூற்றுக்கு 49 சதவீதம் பேர் கல்வி கற்கின்றனர். இந்தியாவிலேயே அதிக
உயர்கல்வி கற்கும் மாநிலம் தமிழ்நாடு. 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு முதல் திமுக ஆட்சி செய்தது அந்த காலகட்டத்தில் அதிக மின்சார வெட்டு இருந்தது.
தடையில்லாத மின்சாரம் வழங்குகிற அரசாங்கம் அதிமுக அரசாங்கம். தமிழகம் மின் மிகை மாநிலமாக விளங்குகிறது. 2019 தொழில் முதலீட்டாளர்கள் மூலம் 5 லட்சம் இளைஞர்களுக்கு நேரடியாகவும், 5 லட்சம் இளைஞர்களுக்கு மறைமுகமாகவும் வேலை கிடைக்கும். அதிமுக அரசு நாட்டு மக்களுக்காக உழைக்கின்ற அரசு என்பதை ஸ்டாலின் உணர வேண்டும். வீட்டு மக்களுக்காக உழைக்கின்ற கட்சி திமுக, கீழ்த்தரமான செயல்களை செய்கின்ற திமுக அரசை நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
டெல்டா மாவட்ட விவசாய பெருமக்கள் அமைச்சர்கள் கோரிக்கையை ஏற்று கடைக்கோடி மக்கள் தண்ணீரை அனைத்து கால்வாய்களும் சுத்தம் செய்து தண்ணீர் கொடுக்கப்பட்டது. அதன் விளைவாக எப்பொழுதும் இல்லாத அளவில், அதிகமான 32 லட்சத்து 41 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கினோம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கினோம். எந்த ஆட்சியிலும் இதுபோல் வழங்கவில்லை. ஸ்டாலினுக்கு விவசாயத்தைப் பற்றியும் தெரியாது, அவருடைய கஷ்டத்தை பற்றியும் தெரியாது. திமுக தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என ஒரு பொய்யான அறிக்கையை கொடுத்திருக்கிறார்கள். நான் ஏற்கனவே கடனை தள்ளுபடி செய்து விட்டேன் இனிமே எங்க போய் தள்ளுபடி செய்ய போற. கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளது. ஆந்திர அரசும் கர்நாடக அரசும் இதற்கு ஒத்துழைப்பு தருவதாக சொல்லியிறுக்கிறார்கள். டெல்டா விவசாயிகளுக்கு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மும்முறை மின்சாரம் 24 மணி நேரம் வழங்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் கேபிள் இணைப்பு கட்டணம் இல்லாமல் வழங்கப்படும். மணலி கந்தசாமி அவர்களுக்கு மணி மண்டபம் கட்டப்படும். முத்துப்பேட்டை தனி தாலுகாவாக உருவாக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும். சொந்த வீடு கட்ட நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் வழங்கப்பட்டு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu