திருத்துறைப்பூண்டி அருகே குளத்து நீரில் மூழ்கி அண்ணன், தம்பி பலி

திருத்துறைப்பூண்டி அருகே   குளத்து நீரில் மூழ்கி அண்ணன், தம்பி பலி
X

திருத்துறைப்பூண்டி அருகே நீரில் மூழ்கி பலியான அண்ணன்- தம்பி.

திருத்துறைப்பூண்டி அருகே குளத்து நீரில் மூழ்கி அண்ணன், தம்பி பலியானார்கள்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பசுபதி. அரசு போக்குதுறையில் செக்கராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ஹரிநாத் (19) டிப்ளமா முடித்துள்ளார். இதேபோல் திருப்பூரில் வசித்து வரும் இவரது தம்பி தமிழ்ச்செல்வன் மகன் ஷ்யாம் (17) ஆகியோர் நெடும்பலம் வடக்குதெரு பகுதியில் உள்ள பள்ளியப்பன் குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர். குளத்து நீரில் மூழ்கி இருவரும் உயிரிழந்தனர். போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஹரிநாத், ஷ்யாம் இருவரும் தங்கை பவதாரணியின் காதணி விழாவுக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி இறந்தது அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!