திருவாரூர்: உளுந்து சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு
திருவாரூர் மாவட்டத்தில் தீவிர உளுந்து சாகுபடி பற்றி விவசாயிகளிடம் பிரச்சாரம் செய்யப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் வேளாண் துறை சார்பாக நஞ்சை தரிசில் உளுந்து பயிரிடுதல் முனைப்பு இயக்கம் என்ற பேரில் விவசாயிகளுக்கு உளுந்து சாகுபடியில் முனைப்பு ஏற்படுத்தும் விதமாக நிகழ்ச்சி நடைபெற்றது.
குறிப்பாக திருத்துறைப்பூண்டி அடுத்த விட்டுகட்டி ,தீபாம்பாள்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள நஞ்சை சாகுபடி பரப்பில் உளுந்து பயிரிடுவது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வேளாண் உதவி இயக்குனர் சாமிநாதன் கூறுகையில்
திருத்துறைப்பூண்டி வட்டார பகுதிகளில் 5000 ஹெக்டேர் பரப்பளவில் உளுந்து சாகுபடி செய்வதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது .வேளாண் விரிவாக்க மையங்களில் உளுந்து பயிருக்கு தேவையான உரங்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதால் விவசாயிகள் மானிய விலையில் அவற்றை பெற்று உளுந்து சாகுபடியில் அதிக மகசூல் காண வேண்டும் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu