திருத்துறைப்பூண்டியில் காங்கிரஸ் கட்சியை கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டியில் காங்கிரஸ் கட்சியை கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
X

திருத்துறைப்பூண்டியில் பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருத்துறைப்பூண்டியில் காங்கிரஸ் கட்சியை கண்டித்து பா.ஜ.க. வினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகில்பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பஞ்சாபில் பிரதமர் நரேந்திர மோடி வருகையில் பாதுகாப்பு குறைபாடுகளை ஏற்படுத்தி ஜனநாயக விரோத செயலில் ஈடுபட்ட காங்கிரஸ் ஆட்சியை கண்டித்து மாவட்ட தலைவர் ராகவன் தலைமையில் நடந்தது. இதில் ஏராளமான பா.ஜ.க.வினர் மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!