வணிகர்களுக்கான சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஆன்லைன் மோசடி, சைபர் மோசடி குறித்து வணிகர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
திருத்துறைப்பூண்டியில் கணினி வழி பணப்பரிமாற்றம் மற்றும் வர்த்தகம் தொடர்பாக எழும் குற்ற செயல் தடுப்பு குறித்து வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏடிஎம் சி பி வி நம்பர், ஆதார் கார்டு எண்ணை பாதுகாப்பாக வைக்கவும் எவரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது, ரகசிய குறியீடு எண்ணை கடன் பற்று அட்டை மீது எழுதி வைத்துக்கொள்ளக்கூடாது, இணையத்திலோ அலைபேசியில் உங்களது சுய விபரங்களை எவரேனும் கேட்டால் பகிர்ந்து கொள்ள வேண்டாம், இணையத்தில் சலுகை விலையில் பொருட்கள் வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும் உள்ளிட்டவை குறித்தும் இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
தொடர்ந்து நிகழ்ச்சியில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. சைபர் கிரைம் தொடர்பான புகார் தெரிவிக்க 155260 என்ற எண்ணுக்கு தெரிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது .
இந்நிகழ்ச்சியில் திருவாரூர் சைபர் கிரைம் எஸ் ஐ கணபதி ,திருத்துறைப்பூண்டி காவல் ஆய்வாளர் கழனியப்பன், காவல் துணை ஆய்வாளர் சுந்தரமூர்த்தி கலந்துகொண்டு சைபர் கிரைம் குற்றங்களைப் பற்றி அவர்களுக்கு விளக்கி கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu