மகளிர் தினத்தை முன்னிட்டு மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மகளிர் தினத்தை முன்னிட்டு மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

திருத்துறைப்பூண்டியில் நடந்த மகளிர் தினவிழாவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷர்மிளா பேசினார்.

திருத்துறைப்பூண்டியில் மகளிர் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சர்மிளா பள்ளி மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினார். பெண்களுக்கான அதிகாரங்கள் உரிமைகள் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது குறித்தும் எடுத்துரைத்தார்.

இதேபோன்று தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. மேலும் பெண்கள் பாதுகாப்பு குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story