அங்கன்வாடி ஊழியர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்: அரசுக்கு கோரிக்கை

அங்கன்வாடி ஊழியர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்: அரசுக்கு கோரிக்கை
X

திருத்துறைபூண்டி ஒன்றிய பெருந்தலைவர் பாஸ்கரிடம்  அங்கன்வாடி ஊழியர்களையும் முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று கோரி மனு அளித்தனர்.

அங்கன்வாடி ஊழியர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருத்துறைப்பூண்டியில் 108 மையங்களில் 97 அங்கன்வாடி பணியாளர்கள் பணிபுரிகின்றனர் இவர்கள் கொரானா ஊரடங்கு காலத்தில் வீடு வீடாகச் சென்று முட்டை அரிசி பருப்பு இணை உணவு என அனைத்தையும் வீட்டிற்கே சென்று வழங்கியுள்ளனர்

மேலும் ஒவ்வொரு வீடாகச் சென்று ஆக்சிசன் அளவு உடல் வெப்ப பரிசோதனை எடுப்பது என இந்த கொரானா காலத்தில் தாங்கள் சிறப்பாக பணியாற்றி உள்ளதாகவும் தங்களை அரசு பணியாளர்களாக நியமித்து காலமுறை ஊதியம் வழங்கி தங்களை முன் களபணியாளர்களாக அறிவித்து முன்கள பணியாளர்களுக்கான சலுகை வழங்க வலியுறுத்தியும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர்

திருத்துறைபூண்டி ஒன்றிய பெருந்தலைவர் பாஸ்கரிடம் அரசுக்கு இந்த கோரிக்கையை கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக கோரிக்கை மனு வழங்கினர்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்