திருத்துறைப்பூண்டியில் அம்பேத்கரின் 132 -வது பிறந்த நாள் கொண்டாட்டம்

திருத்துறைப்பூண்டியில்  அம்பேத்கரின் 132 -வது பிறந்த நாள் கொண்டாட்டம்
X

திருத்துறைப்பூண்டியில் அம்பேத்கர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

திருத்துறைப்பூண்டியில் அம்பேத்கரின் 132-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 132 ஆவது பிறந்த தினம் இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பாக மலர் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இதில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனிச்சாமி, உலகநாதன் உள்ளிட்டோரும் ஏராளமான பொதுமக்களும் அண்ணல் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

Tags

Next Story
ai in future agriculture