திருத்துறைப்பூண்டியில் தேர்தல் அதிகாரியை கண்டித்து அதிமுகவினர் சாலை மறியல்

திருத்துறைப்பூண்டியில் தேர்தல் அதிகாரியை கண்டித்து அதிமுகவினர் சாலை மறியல்
X

திருத்துறைப்பூண்டியில் தேர்தல் அதிகாரியைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர்

திருத்துறைப்பூண்டி நகராட்சி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் திமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதை கண்டித்து அதிமுகவினர் சாலைமறியல்

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 24 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது .

திருத்துறைப்பூண்டி 5 -ஆவது வார்டில் அதிமுகவின் சார்பில் முருகதாஸ் என்பவரும், திமுக சார்பில் திமுக நகர செயலாளர் பாண்டி என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். திருத்துறைப்பூண்டி நகராட்சி தேர்தல் அலுவலர்கள் திமுக வேட்பாளர் பாண்டியனுக்கு ஆதரவாக செயல்பட்டு அதிமுக வேட்பாளர் முருகதாஸ் என்பவரின் வேட்பு மனுவை நிராகரித்துள்ளனர்.

இதே வார்டில் வேட்புமனு தாக்கல் செய்த மேலும் 2 சுயேட்சை வேட்பாளர்களும் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். இதனால் திமுக வேட்பாளர் பாண்டி போட்டியின்றி தேர்வு பெறும் சூழல் உருவாகியுள்ளது. இதுபோன்று திமுகவிற்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் அதிகாரிகளை கண்டித்து திருத்துறைப்பூண்டி அதிமுக நகர செயலாளர் சண்முகசுந்தரம் தலைமையில், அதிமுகவினர் பழைய பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு உரிய தீர்வுகாணும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!