முத்துப்பேட்டையில் காரில் கடத்தி வரப்பட்ட 82 கிலோ கஞ்சா பறிமுதல்

முத்துப்பேட்டையில் காரில் கடத்தி வரப்பட்ட 82 கிலோ கஞ்சா பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகள்.

முத்துப்பேட்டையில் காரில் கடத்தி வரப்பட்ட 82 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை ஈ.சி.ஆர். சாலையில் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், எஸ்.ஐ பிரபு மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டுக்கோட்டையிலிருந்து முத்துப்பேட்டை நோக்கி வந்த காரை சோதனை செய்த போது 82 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

கடத்தலில் ஈடுபட்ட சோழன்குடிக்காடு பகுதியை சேர்ந்த ராஜா (43), ஜாம்புவானோடை பகுதியை சேர்ந்த வீரகணேசன் (28) , செந்தில்நாதன் (29), பிரபாகரன் (32) , கீழவாடியக்காடு பகுதியை சேர்ந்த மகேஷ் (38) உள்ளிட்ட 5 பேரை முத்துப்பேட்டை போலீசார் கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 82 கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!