திருத்துறைப்பூண்டி அருகே 412 புதுச்சேரி மது பாட்டில் பதுக்கிய 2 பெண்கள் கைது

திருத்துறைப்பூண்டி அருகே 412 புதுச்சேரி மது பாட்டில் பதுக்கிய 2 பெண்கள் கைது
X

திருத்துறைப்பூண்டியில் பறிமுதல் செய்யப்பட்ட புதுச்சேரி மது பாட்டில்கள்.

திருத்துறைப்பூண்டி அருகே சட்ட விரோதமாக புதுச்சேரி மது விற்பனை செய்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடி பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையொட்டி திருத்துறைப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் சோமசுந்தரம் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் கழனியப்பன் தலைமையிலான போலீசார் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த அன்பு(55) யோகாம்பிகை (59) ஆகிய இரண்டு பெண்களை கைது செய்தனர் .மேலும் அவர்கள் பதுக்கி வைத்திருந்த 412 புதுச்சேரி மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!