திருத்துறைப்பூண்டி தூய லூர்து அன்னை ஆலயத்தின் 100ஆம் ஆண்டுவிழா கோலாகலம்
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தூய லூர்து அன்னை ஆலயத்தின் 100 வது ஆண்டுத் திருவிழா கொடியேற்றதுடன் கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது.
தொடர்ந்து 10 தினங்கள் நடைபெற்ற திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தோ்பவனி திருவிழாவில் தேரில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரித்து விமரிசையாக திருவிழா நடைபெற்றது. ஆலயத்தில் ஏராளமானோர் பங்கேற்ற சிறப்பு ஜெபக்கூட்டத்தில் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்காகவும், கொரோனா தொற்று முற்றிலும் ஒழிய வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும், உலக நன்மைக்காக சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. முன்னதாக ஆலயத்தில் தொடங்கிய தோ்பவனி பழையபேருந்துநிலையம், நகராட்சி, தலைமை தபால் நிலையம் உள்ளிட்ட முக்கியவீதிகள் வழியாக மீண்டும் ஆலயத்திற்கு வந்தது. இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu