இரண்டாவது நாளாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

இரண்டாவது நாளாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள்  உள்ளிருப்பு போராட்டம்
X
திருத்துறைப்பூண்டியில் இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.
திருத்துறைப்பூண்டியில் இரண்டாவது நாளாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்  உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.

மூன்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீது தண்டத் தீர்வை நோட்டீஸ் வழங்கிய உதவி இயக்குனரை கண்டித்தும், 7. 12.2021 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொண்டபடி கோரிக்கைகளை நிறைவேற்றி தராமல் 4 மாதங்களாக காலம் தாழ்த்தி வரும் மாவட்ட நிர்வாகத்தை கண்டிப்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கருப்புபேட்ஜ் அணிந்து இரண்டாவது நாளாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் 40க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!