தாரை தப்பட்டை, மாலையுடன் வேட்பாளருக்கு வரவேற்பு

தாரை தப்பட்டை, மாலையுடன் வேட்பாளருக்கு வரவேற்பு
X

திருவாரூர் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணனுக்கு பொதுமக்கள் மாலை,தாரை தப்பட்டையுடன் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளது. இந்தநிலையில் திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் திருவாரூர் ஒன்றியத்திற்குட்பட்ட தண்டலை, தியானபுரம் ,வேலங்குடி,புலிவலம் ,கூடூர், மாங்குடி பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு வேலங்குடி பகுதியில் நூற்றுக்கும் பெண்கள் ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து புலிவலம் கடைவீதியில் வேட்பாளருக்கு சுமார் 500க்கும் மேற்பட்டோர் திரண்டு தாரை தப்பட்டை அடித்து ஆரத்தி எடுத்தும் ஆளுயர மாலை அணிவித்தும் கிரீடம் வைத்தும், மகிழ்ந்தனர். இதேபோல் வாக்கு சேகரிக்கும் பகுதிகளில் பொதுமக்கள் உற்சாகமாக திமுக வேட்பாளருக்கு வரவேற்பு அளித்து வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!