திருவாரூரில் மழைநீர் சேமிப்பு திட்ட விழிப்புணர்வு பிரச்சாரம்

திருவாரூரில் மழைநீர் சேமிப்பு திட்ட விழிப்புணர்வு பிரச்சாரம்
X

திருவாரூர் ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் சங்கம் சார்பில், மழைநீர் சேமிப்பு திட்ட துவக்க விழா மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

திருவாரூரில், மழைநீர் சேமிப்பு திட்ட துவக்க விழா மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

திருவாரூர் ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் சங்கம் சார்பில், விளமல் ராஜகணபதி நகரில், மழைநீர் சேமிப்பு திட்ட துவக்க விழா மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. சங்க தலைவர் ராஜ் (எ) கருணாநிதி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், செயலாளர் உத்திராபதி வரவேற்பு நிகழ்த்தினார்.

முன்னாள் தலைவர் ரஜினிசின்னா, வீட்ட்டின் உரிமையாளர் சுந்தரராமன் ஆகியோர் முன்னிலையில், சங்க நீர் மேலாண்மை திட்ட இயக்குனர்.பால.சம்பத், பிரசாரத்தை துவக்கி வைத்தார். மண்டலம் 11 -ன் உதவி ஆளுநர் ராமதுரை, மழை நீரைச் சேகரித்து பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்கும், கால்நடைகளுக்கும், நீர்ப்பாசனத்திற்கும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும் பயன்படுத்தலாம் என்றார்.

நிகழ்ச்சியில், ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலியமூர்த்தி, முகிலன், மோகன், ராஜசேகரன், முருகானந்தம், வழக்கறிஞர் மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business