ஜம்புகேஸ்வரர் கோயிலில் பால்குடம் எடுத்து வழிபாடு

ஜம்புகேஸ்வரர் கோயிலில் பால்குடம் எடுத்து வழிபாடு
X

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா சலிப்பேரி ஊராட்சி பத்தினியாபுரம் கிராமத்தில் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இக்கோயிலில் முருகர் வள்ளி தெய்வானையுடன் அமைந்துள்ளார். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரா பவுர்ணமி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு கொரோனா தொற்று 2-வது அலை தாக்கத்தினால் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி குறைந்தளவு பக்தர்களுடன் சித்திரா பவுர்ணமி விழா நடைபெற்றது. விழாவின் போது இக்கோயிலில் திருமுருகனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் பாலாபிசேகம் உட்பட அபிசேக ஆராதனையும் நடைபெற்றது. இதனையடுத்து வள்ளி, தெய்வானையுடன் முருகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியருளினர்.

முன்னதாக பக்தர்கள் அங்குள்ள ஈஸ்வரன் குளக்கரையிலிருந்து பால்குட காவடி எடுத்து கோயிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் பத்தினியாபுரம் சுற்றுவட்டார பகுதி மக்களும், பக்தர்களும் கொரோனா கட்டுப்பாட்டால் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்களும் உபயதாரர்களும் செய்திருந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture