திருவாரூர் அருகே கொள்ளுமாங்குடி அகரமேட்டில் உலக உணவு தின கருத்தரங்கம்

திருவாரூர் அருகே கொள்ளுமாங்குடி அகரமேட்டில்  உலக உணவு தின கருத்தரங்கம்
X
திருவாரூர் அருகே கொள்ளுமாங்குடி அகரமேட்டில் உலக உணவு தின கருத்தரங்கம் நடந்தது.
திருவாரூர் அருகே கொள்ளுமாங்குடி அகரமேடு அமிர்தம் இயற்கை வேளாண்மை பண்ணையில் உலக உணவு தின கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

திருவாரூர் அருகே கொள்ளுமாங்குடி அகரமேட்டில் ஆதிரங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் மற்றும் மயிலாடுதுறை ரோட்டரி சார்பாக அமிர்தம் இயற்கை வேளாண்மை பண்ணையில் உலக உணவு தின கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

விழாவிற்கு வருகை புரிந்தவர்களை அமிர்தம் இயற்கை வேளாண் பண்ணை கார்த்திகேயன் வரவேற்றார், தமிழக இயற்கை உழவர் இயக்கத் தலைவர் அசோகன் தலைமை வகித்தார். இயற்கை வேளாண்மை பயிற்றுனர் உதயகுமார், கதிராமங்கலம் ஸ்ரீராம், கிரீன் நீடா தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு, ரிஷியூர் செந்தில் முன்னிலை வகித்தனர். நஞ்சில்லா உணவு உற்பத்தி செய்யும் உழவர்களை பாராட்டி பீஸ் பவுண்டேஷன் இயக்குனர் ரோட்டரி செல்வம் உரையாற்றினார்,

பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் கூறியதாவது:-

உலக உணவு தினம் கொண்டாடும் இதே வேளையில் பல லட்சம் மக்கள் ஒருவேளை உணவுகூட கிடைக்காமல் தவிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன, உலக பட்டினி ஆய்வறிக்கையில் 116 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் இந்தியா 101 ஆவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நவீன கால உணவு முறையில் நாம் சாப்பிடும் பொழுது நமக்குத் தேவையான நார்ச்சத்து, புரதச்சத்து ,இரும்புச்சத்து மற்றும் நன்மை பயக்கும் பாக்டீரியா இல்லாத காரணத்தால் பலவிதமான நோய்கள் உருவாக காரணமாகிறது.

நமது உணவு கலாச்சாரத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டிய காலத்தில் உள்ளோம், நஞ்சில்லாத உணவே உணவு என்று நுகர்வோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட நமது பாரம்பரிய நெல் ரகங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்போம் என்று உறுதியேற்போம், மேலும் ரசாயன பயன்பாட்டை குறைத்து இயற்கை விவசாயத்திற்கு திரும்ப விவசாயிகள் முன்வர வேண்டுமென்றும் அதற்கு தமிழக அரசு பக்கபலமாக உணவு சார்ந்த கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் பாதுகாப்பான உணவு, இயற்கை விவசாயம் ,பாரம்பரிய நடவுத் திருவிழா,இந்தியா இயற்கை தர சான்றிதழ் பெறுவதன் அவசியம் குறித்து முன்னோடி விவசாயிகளின் மூலம் நுகர்வோர்களுக்கும் விவசாயிகளுக்கும் எடுத்துரைக்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!