தனியார் நிதி நிறுவனங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகும் பெண்கள்
கொரோனா தொற்று இரண்டாம் நிலை பரவல் காரணமாக சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்....
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியில் உள்ள பெண்கள் பலரும் தொழில் செய்ய, தனியார் நிதி நிறுவனங்களிடம் சுய உதவி குழுக்கள் மூலம் கடனுதவி பெற்றுள்ளனர்...
தமிழகத்தில் 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது தமிழக அரசு.
இந்த நிலையில், ஊரடங்கின் காரணமாக தற்பொழுது தவணை தொகையை செலுத்துவதற்கு முடியாத நிலையை ஏற்பட்டுள்ளது.. ஆனால் தனியார் நிதி நிறுவனங்கள் கட்டாயமாக தவணைத் தொகையை செலுத்த வேண்டும் என நிர்ப்பந்தித்து வருகின்றனர்...
இந்நிலையில்.... திருவாரூர் மாவட்ட ஆட்சியர், தனியார் நிதி நிறுவனங்களுக்கு கடன் தொகை வசூலிப்பதை நிறுத்தவேண்டும் எனவும், கடன் பெற்றவர்களிடம் கட்டாயப்படுத்தி கடன் வசூல் செய்யக்கூடாது மேலும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவித்திருந்தார்.
ஆனால், எந்த ஒரு தனியார் நிறுவனங்களும் ஆட்சியரின் உத்தரவை கடைபிடிக்காமல் கட்டாய வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், வலங்கைமான் பகுதியில் குறிப்பிட்ட தனியார் நிறுவன ஊழியர் தொழில் கடன் பெற்ற பெண் ஒருவரிடம் மிரட்டும் விதமாக தொலைபேசியில்.. 'உங்கள் வீடு எங்கு உள்ளது எனவும், உங்களை புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப்பில் வெளியிட வேண்டும்.. 'எனவும் பேசியுள்ளர்....
குடவாசல் பகுதியில் உள்ள திருவீழிமிழலையில் கடனுதவி பெற்ற பெண் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளதை சொன்னதற்கு, உங்கள் பணத்தை கலெக்டர் கட்டுவாரா.? என்று கேட்டுள்ளார்..
நன்னிலம் அருகே மாப்பிள்ளைக்குப்பம் பகுதியில் உள்ள பெண்கள் சொல்லும் போது...'கொரோனா காரணமாக வீட்டு வேலை செய்யும் எங்களை மூன்று மாதத்திற்கு வேலைக்கு வரவேண்டாம் என சொல்கின்றனர்.. எங்களால் தற்பொழுது பணம் கட்ட முடியாது, என்றும் தற்போது நிவாரணமாக கொடுத்த 2,000 ரூபாயையும் குழுக்களுக்கு கட்ட வேண்டியதாக உள்ளது" எனக் கூறினர்.
தொலைபேசியில் நிறுவன ஊழியர் மிரட்டும் விதமாக பேசுவதும்.. தகாத வார்த்தைகளை பயன்படுத்தி அவமானப் படுத்துவதும், பெண்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உளளது,
மேலும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தும் உத்தரவை காற்றில் பறக்கவிட்டு கட்டாய வசூலில் ஈடுபட்டு வருகின்ற நிறுவனங்களால், குழுக்கள் மூலம் கடனுதவி பெற்ற பெண்கள் மன உளைச்சலுக்குள்ளாகி, விபரீத முடிவு எடுப்பதற்கு முன், அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா? என்பதே பலரது கேள்வியாக உள்ளது...
தனியார் நிதி நிறுவன ஊழியர் அங்கிருந்து செல்லும்போது செய்தி சேகரித்துக் கொண்டிருந்த செய்தியாளரிடம் என்னை ஒன்றும் செய்துவிட முடியாது என்று செய்தியாளரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu