வலங்கைமானில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள்

வலங்கைமானில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள்
X

வலங்கைமானில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

வலங்கைமானில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 400க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தி.மு.க. இளைஞரணி செயலாளரும், சட்டமன்றஉறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் 44-வதுபிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 400க்கும் மேற்பட்டோருக்கு அரிசி , மளிகை ஊட்டச்சத்து பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது .

இதில் வலங்கைமான் ஒன்றிய செயலாளர்கள் மேற்குஅன்பரசன், கிழக்கு தெட்சிணாமூர்த்தி, உதயநிதிஸ்டாலின் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் எம்.பி.எடிசன் , மாவட்ட செயலாளர் ஆர்த்திகேப்ஸ் மணி , மாவட்ட பொறுப்பாளர்கள் இளவரசன், ராஜசேகர் மற்றும் ரசிகர் மன்ற மாவட்ட , ஒன்றிய , நகர நிர்வாகிகள் பலர்கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!