காவல்துறையினர் எச்சரிக்கையை மீறும் திருவாரூர் வியாபாரிகள்

காவல்துறையினர் எச்சரிக்கையை மீறும் திருவாரூர் வியாபாரிகள்
X

போலீசார் எச்சரித்தும் கடையை மூடாத வியாபாரிகள்

காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தும் கடையை மூடாமல் திருவாரூர் வியாபாரிகள் தொடர்ந்து வியாபாரத்தில் ஈடுபட்டனர்.

மளிகை கடைகள், காய்கறி கடைகள் மட்டும் இன்றிலிருந்து காலை 6 மணி முதல் 10 மணி வரை திறந்திருக்க அரசு கட்டுப்பாடுகள் விதித்த நிலையில் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியில் குறித்த நேரத்தையும் மீறி கடைகள் திறந்து இருந்தது. காய்கறி மற்றும் மளிகை கடைகளில் வியாபாரிகள் தொடர்ந்து வியாபாரத்தில் ஈடுபட்ட னர்.

சில வியாபாரிகள் கடைகளை மூடிய பிறகும், அறைக்கதவு திறந்த நிலையிலும் வியாபாரம் செய்தனர். மேலும், காவல்துறை எச்சரித்தும் கடையை மூட செய்த பிறகும் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை காவல்துறையினர் மீண்டும் மீண்டும் எச்சரித்தனர். அப்போதும் அவர்கள் கடையை மூடவில்லை.

தொடர்ந்து நன்னிலம் காவல்துறை ஆய்வாளர் சுகுணா ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் குறித்த அறிவிப்பு செய்தார்.

பொதுவாக ஊரடங்கை மீறி மக்கள் நடமாட்டம் உள்ள நிலையில் மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே கொரொனாவை கட்டுப்படுத்த முடியும் சூழ்நிலை உள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!